யோகி பாபு நடித்த `BOAT 'படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு | Yogi Babu starrer ``BOAT'' OTT release announcement

  மாலை மலர்
யோகி பாபு நடித்த `BOAT படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு | Yogi Babu starrer ``BOAT OTT release announcement

யோகி பாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி போட் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.படத்தில் யோகி பாபுவுடன் கவுரி கிஷன், மதும்கேஷ், எம்.எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், ஜெசி, சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, மற்றும் பலர் நடித்து இருந்தனர்.இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ஓடிடி தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை